மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் - புதிர் வழங்கும் நிகழ்வு!திருமூலநாயனாரால் சிவபூமி என சிறப்பித்து கூறப்பெற்ற இலங்கைமணித் திருநாட்டில் வயலும் வயல் சார்ந்த மருதநிலப் பிரதேசமாய் நெற்செய்கைக்குப் பெயர்பெற்று விளங்கும் மட்டக்களப்பு படுவான்கரைப் பெருநிலத்தின் கண் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாய் தானாக தோன்றி  அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி புதிர் நெல் வழங்கும் நிகழ்வு நேற்று(16-02-2024) இடம் பெற்றது.


ஆலயங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக செயற்ப்பட்டு மக்கள் நல தொண்டுகள் பலவற்றை ஆற்றிவரும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகவகத்தினரின் சேவைகள் வரிசையிலே புதிர்உண்ணுதலும் அதனோடு இணைந்து புதுர் நெல் வழங்குதல் நிகழ்வும் வெகு சிறப்பாக ஆலய நிர்வாக சபை தலைவரின் தலைமையிலே சிறந்த ஒழுங்கமைப்புடன் இடம்பெற்றது.


ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து புதுர் நெல் உள் வீதிவலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு புது அரிசியில் பொங்கல் படைக்கப்பட்டதை தொடர்ந்து புதுர்நெல் வழங்குதல் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்டு நெல்லினை பெற்றுக்கொண்டனர். 


பல வருடங்களாக இவ் அளப்பெரிய பணியினை ஆலய நிருவாகம் முன்னெடுத்து வருகிறது எத்தனை பக்தர்கள் வருகை தந்தாலும் அவர்களுக்கு பொதிசெய்யப்பட்ட நெல் வழங்கப்பட்டதையும் பக்தர்கள் அதனை பக்திபூர்வமாக தான்தோன்றி நாதனின் பிரசாதமாக பெற்றுச்செல்வதையும் அவதானிக்கமுடிந்தது.புதியது பழையவை