பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை அறிவிப்பு!அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில்,

இலங்கை பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளைய(16-02-2024) தினம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.

இதன்படி, எதிர்வரும் புதிய கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.


இந்தநிலையில், சனி மற்றும் ஞாயிறு தினங்கள் மூன்றாம் தவணைக்கான விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை