இலங்கையில் விற்பனை செய்யப்பட்ட தவளை ஐஸ்கிரீம்




யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14-02-2024) குளிர்களி குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில், குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை