இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் பதுளை மாவட்ட செயலகம் ,இந்து சமய அபிவிருத்தி பேரவை, அகிலன் அமைப்பு, மற்றும் ஏனைய இந்து சமயம் சார் நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா இடம் பெற்றன
லண்டன் வோள்தஸ்ரோ கற்பக வினாயகர் ஆலய முழுமையான நிதிப்பங்களிப்புடன் நேற்று(11-02-2024) இலங்கை ஊவா மாகாண மாவட்டச்செயலகத்தில் அனைத்து பிரதேச செயலகங்களும் அறநெறிப்பாடசாலைகளும் இணைந்து நடாத்திய மாபெரும் பொங்கல் திருவிழாவானது இந்துக்களின் வழிபாட்டு முறைப்படி சிறப்பாக இடம் பெற்றது.
இன்றைய நிகழ்வின் அதிதிகளாக
பதுளை மாவட்ட அரசாங்க அதிபர்
P. S .Prabath Abeywardana
இந்துகலாசார அமைச்சின் பணிப்பாளர் திரு அநிருதன் மற்றும்
கலாநிதி வீ .ஆர் மகேந்திரன் (JP )MAF
திடீர் மரணவிசாரண அதிகாரியும். லண்ன் அகிலன் பவுண்டேசன் பணிப்பாளரும்
நிகழ்வின் போது மதகுருமார் ஆசிரியர்கள் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.