மட்டக்களப்பில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டுப் பறைவகள்மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் கிரான்குளம் குருக்கள்மடத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டுப்பறைவகள்.

இக் குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சிபொரித்ததும் தனது தாயகம் நோக்கி மீண்டும் திரும்பும் என சொல்லப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் சில தீவுப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி பறந்துவரும் இப் பறவைகள் டிசம்பர் மாதப்பகுதியில் இருந்து ஏப்ரல் வரை இங்கு தங்கியிருக்கிறது.
இப் பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடுகளை கட்டி தங்கியிருக்கும் அதே வேளை இக் குளத்திலுள்ள மீன்களை பிடித்து உணவாக உண்ணுகின்றது. மரங்களில் இவை தங்கியிருக்கும் போது வெள்ளை போர்வை போர்த்தியது போல இவ் மரங்கள் அழகாக காட்சி கொடுக்கிறது.

வருடா வருடம் அவுஸ்திரேலியாவிலிருந்து அழையா விருந்தினர்களாக எங்களது பகுதிக்கு வருகைதந்து எங்கள் மண்ணில் தங்கியிருந்து செல்லும் இப் பறவைகள் முக்கியத்துவம் மிக்கதே.

இக் குளத்தை அண்டிய பகுதிகளை துப்பரவு செய்து முறையாக பராமரித்தால் இப் பகுதிகளில் அதிக மக்கள் வருகை தந்து பறவைகளை பார்வையிட்டு செல்லும் சுற்றுலா இடமாக இது மாறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை