கடவுசீட்டு எடுப்பதற்காக சென்ற வயோதிப பெண் மாயம்பத்திரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் வைத்து வயோதிப பெண்மணி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கற்பகதேவி வைதீஸ்வரன் எனும் பெயருடைய 75 வயது வயோதிப பெண் ஒருவரே  (27-02-2024) பிற்பகல் காணாமல் போயுள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


இவர் பருத்தித்துறை வியாபாரிமூலையை சொந்த இடமாகக் கொண்டதுடன், தற்போது மட்டக்களப்பில் இருந்து கடவுச்சீட்டு எடுப்பதற்கு உறவினர் ஒருவருடன் சென்ற போது காணாமல் போயுள்ளார்.


அத்துடன் இவர் மறதிக்குணம் உடையவர் என்றும் தங்கமணி என்று வீட்டில் அழைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் நகை, பணம், தொலைபேசி போன்ற பெறுமதியான பொருட்கள் எதுவும் அவரிடம் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை