ஜனாதிபதித்தேர்தலா? பாராளுமன்றத்தேர்தலா? -2024ல்




எதிர்வரும் 2024, செப்டம்பர் ,17, ம் திகதி தொடக்கம் 2024, அக்டோபர்,17, ம் திகதி இந்த ஒருமாதகாலத்துக்குள் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் நடத்தப்படவேண்டும்.

அதை ஒத்திவைக்க சட்டத்திலோ, இலங்கை அரசியலமைப்பிலோ இடமில்லை.

ஆனால் அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தல் நடத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

ஜனாதிபதி தேர்தல் நடத்த ஆயிரம் கோடி (1000) ரூபாய் நிதி கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலை முற்கூட்டியே ஜனாதிபதி நடத்த எத்தனித்தால் ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட ஆயிரம் கோடியும் பாராளுமன்ற தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டால் ஜனாதிபதி தேர்தலுக்கு பணம் இல்லை என காட்டுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி எடுப்பதாக பேராசிரியர் பீரீஷ் தெரிவித்துள்ளார். (ஏதாவது ஒரு தேர்தலுக்கு மட்டுமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளது)

பேராசிரியர் பீரீஷ் குறிப்பிட காரணம் கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல் 2023, ஜனவரியில் நடத்த வேட்பு மனு கோரப்பட்ட நிலையில் இறுதியில் பணம் இல்லை என்ற காரணத்தை காட்டி ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டவர் அதே முயற்சியை இதற்கும் எடுக்கலாம் என கூறியுள்ளார்.

ஆனால் அவ்வாறு ஜனாதிபதி தேர்தலை பிற்போட சட்டத்தில் இடமில்லை.

பாராளுமன்றத்தை கலைத்து காபந்து அரசு அமைக்கப்பட்டு அந்த ஒரு மாத காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தாலாம் எனவும் இன்னுமொரு கருத்து உள்ளது இதற்காக சட்ட ஆலோசனைகளை ஜனாதிபதி பெற்றுவருவதாக சில ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. அது சரியா தவறா என்பது சட்ட ஆலோசனைகளை பொறுத்தே நடைபெறும்.

அதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான யோசனையையும் தற்போதய ஜனாதிபதி ஆராய்ந்து காலத்தை கடத்தவும் முயற்சிப்பதாகவும், அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்றத்தில் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் தேர்தல் தொடர்பாக ஒரு முடிவை எடுக்கமுடியாமல் திண்டாடுவது மட்டும் உண்மை.

எதுவானாலும் இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் சட்டப்படி நடைபெற வேண்டும் என்பது மட்டும் உண்மை.
பாராளுமன்றத்தேர்தல் அதற்கு முன்னம் இடம்பெறவேண்டுமானால் அதன் அதிகாரம் ஜனாதிபதியின் கைகளிலேயே உண்டு.

பொறுத்திருந்து பார்ப்போம்‼️

புதியது பழையவை