2024 ஆம் ஆண்டுக்கான சுபநேரங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரச ஜோதிட குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான சுபநேரங்கள் தொடர்பான அறிவிப்பை பின்பற்றுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்வேறு கருத்துக்களுக்கு ஏமாறாமல், அரச ஜோதிட குழுவினால் தயாரிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சுபநேர குறிப்பின் பிரகாரம் சிங்கள புத்தாண்டு சுபச் சடங்குகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.


புத்தாண்டு சடங்கு
1993 ஆம் ஆண்டு முதல், அரச ஜோதிடர்கள் குழு ஒன்று கூடி, புத்தாண்டுக்கான சுபநேரத்தை தொகுத்து வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஜோதிட குழுவினால் தயாரிக்கப்பட்ட சுப குறிப்பின் படி புத்தாண்டு சடங்குகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.
புதியது பழையவை