அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம்
அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அரசு ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 5 ஆயிரம் ரூபா கொடுத்துள்ளோம். 


இனி 10,000 பேரும் ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்க்கப்படும்.  மேலும், ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் வழங்குவதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை