2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்
இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிகழவிருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் குறித்து 54 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியன்று நிகழுவுள்ளதுடன் இது ஜோதிட மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.


அபூர்வ சூரிய கிரகணம் 

குறித்த சூரிய கிரகணம் இரவு 9:12 மணிக்கு தொடங்கி 1:25 மணி வரை நீடிக்கும் என்பதுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற அமைப்பில் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளதாக கூறப்படுகின்றது.


இதன்போது பூமியின் ஒரு பகுதி முற்றிலும் இருள் அடைவது மட்டுமல்லாமல் நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அன்றே கணித்த பத்திரிக்கை
அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செய்தித்தாளிலேயே இவ்வாண்டிற்கான சூரிய கிரகணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தித்தாளில் ஏப்ரல் 8, 2024 அன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம் பற்றி 1970 ஆம் ஆண்டிலேயே கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூரியன், நிலவு மற்றும் பூமி அனைத்தும் நேர் கோட்டில் காட்சியளிக்கும் என்பதுடன் இந்த கிரகணம் இந்தியாவில் தென்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை