பரிதாபமாக உயிரிழந்த நாட்டின் கடைசி ஆண் வரிக்குதிரை!
இலங்கையில் வாழ்ந்து வந்த கடைசி ஆண் வரிக்குதிரையும் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது.

குறித்த வரிக்குதிரை இனப்பெருக்க செயற்பாடுகளுக்காக ரிதியகம சபாரி பூங்காவில் இருந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், அந்த வரிக்குதிரையை கொண்டு வரும் போது அதற்கு அதிக செறிவு மிக்க ஊசி செலுத்தப்பட்டமையினால் அது உயிரிழந்ததாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையின் பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
புதியது பழையவை