ஈஸ்டர் படுகொலை வரலாற்று ஆய்வு நூலை வெளியிடவுள்ள- பிள்ளையான்ஈஸ்டர் படுகொலை தொடர்பான புத்தக வெளியீடு மட்டக்களப்பில் நடைபெற உள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலைகள் என்ற வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று(23-03-2024)மட்டக்களப்பில் நடைபெற உள்ளது.

மட்டக்களப்பில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று(23-03-2024) காலை 9.00 மணிக்கு  நடைபெற உள்ள மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், ஈஸ்டர் படுகொலைகள் மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ள நூலில் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பால பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

புதியது பழையவை