தென்னிலங்கையில் செய்தி ஆசிரியர் ஒருவர் கைது!



இலங்கையில் சிங்கள இணைய தளமொன்றின் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த செய்தி ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

சிங்கள இணைய தளத்தின் செய்தி ஆசிரியர் ஜீ.பி. நிஸ்ஸங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இராணுவத் தளபதியை விமர்சனம் செய்யும் வகையில் வெளியிடப்பட்ட செய்தியொன்று காரணமாக தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு குறித்த செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இரவு 10.45 மணியளவில் பல்லேபெத்த பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறித்து அவரது தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
புதியது பழையவை