பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!



5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப்பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான நிஹால் தல்தூவ பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (04-03-2024) கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் பொத்துஹெர பிரதேசத்தில் 45 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை