இணையதளத்தில் வெளியாகும் நிர்வாண புகைப்படங்கள்! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!
சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று(28-03-2024) முதல் இது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுமென அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் மூலம் பெறப்படும் புகார்கள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "சர்வதேச கண்காணிப்பு அறக்கட்டளைக்கு" தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் இதன் ஊடாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், புகார்களை விசாரித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதை கண்டறிந்து சர்வதேச காவல்துறையினர் மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் இருப்பதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை