மட்டக்களப்பு வாவியில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்பு!
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார் வீதி ஆற்றங்கரை ஓரமாக (மட்டிக்களி மீன் சந்தைக்கு அருகில்) இன்று (29-03-2024) கிரான்குளத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிரான்குளம் கிராமத்தில் சிறு வியாபார நிலையம் ஒன்றினை நடத்தி வந்த இராஜரெத்தினம் என தெரிவிக்கப்படுகிறது

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணத்திற்கானகாரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமயக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை