மட்டக்களப்பு - கல்லடியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து!
மட்டக்களப்பு - கல்லடியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது கல்லடி இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக நேற்று (21-03-2024)இரவு  இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வாகனமானது வீதியை விட்டு விலகில் பாதைக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள சீமெந்து தடுப்பில் மோதியுள்ளது.

எனினும் விபத்தில் எவருக்கும் எவ்வித உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

புதியது பழையவை