மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதுவர்கள்
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஜஸ்டின் பிளோட், ஜப்பான் தூதுவர் மிஷ்கோசி கிடாகி, தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்லி எட்வின் சாள்க் ஆகியோரே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விஜயத்தினை நேற்றைய தினம் மேற்கொண்ட அவர்கள் இன்று(06-03-2024) கடந்த 174 நாட்களாக போராட்டம் நடாத்தி வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.


குறித்த கலந்துரையாடலில் பண்ணையாளர்களுடன் இணைந்து யாழ்பாணத்தில் இருந்து வருகை தந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன், பரசுராமன், பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

புதியது பழையவை