மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்


இது 12 வயது நிரம்பிய ஷரோனும் அவரது 11 வயது நிரம்பிய தங்கை சாராவும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர். இன்று அண்ணனும் தங்கையும் அருகருகே சமாதிகளில் மீளாத் துயில் கொள்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதி மட்டும் இன்னும் கிட்டவே இல்லை.

மதவெறி கொண்டவர்கள் மட்டுமே இதற்கு மூலகாரணமா? இந்தத் தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் வேறு எவரும் இல்லையா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்த பாராளுமன்ற ஆணைக்குழுவே எல்லா உண்மைகளையும் வெளிக்கொணர்ந்த நிலையில் ஸ்கொட்லேன்ட் யார்ட் கதை இன்னும் எதற்கு?

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு. பல ஒத்திகைகளும் நாடகங்களும் அரங்கேறும். அதன் முதலாம் கட்டத்தை மைத்திரி ஆரம்பித்து வைத்து இருக்கிறார். எதிர்வரும் நாட்களில் உருவாகும் தேர்தல் கூட்டணிகள் மைத்திரியின் நாடகத்தை தோலுரிக்கும்.

தாக்குதல் நடைபெறும் என்ற செய்தியை அறிந்திருந்தவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாளாவிருந்தவர்கள் எல்லோரும் இன்றும் அதிகாரத்திலும், அதிகாரத்தை சுற்றியும் இருக்கின்றனர்.

நியாயம் கேட்பவனை கைது செய்ய சட்டங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றனர்.

நாடு காப்பாற்றப் படுகிறதோ இல்லையோ, எமது ஆபத்பாந்தவர் இவர்களை எல்லாம் காப்பாற்றுகிறார், எதிர்காலத்திலும் காப்பாற்றுவார் என்பது நிதர்சனம். 
புதியது பழையவை