தெஹிவளையில் துப்பாக்கி மகசீன்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!



தெஹிவளையில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் 16 T56 துப்பாக்கி ரவைகள் அடங்கிய மகசீன்கள், 3 கிலோ கஞ்சா ஒரு மற்றும் 416 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று முன் (09-03-2024) இரவு தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற விசேட வீதி சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

பின்னர் சந்தேகநபர் வசிக்கும் தெஹிவளை பகுதியில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மேலும் ஒரு கிலோ 416 கிராம் கஞ்சா மற்றும் படுக்கைக்கு அடியில் மூன்று பார்சல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மகசீன்கள்  என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை