வவுனியாவில் பேரூந்தில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்டவரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் இன்று (18-03-2024) காலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து குறித்த பேரூந்து தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் பேரூந்தில் ஏறுவதற்காக வீதியின் மறுபக்கத்திலிருந்து பேரூந்தின் முன்பக்கமாக வந்த முதியவரொருவர் பேரூந்தில் ஏற முற்பட்ட சமயத்தில் பேரூந்தினை சாரதி செலுத்தியமையினால் பேரூந்தில் சிக்குண்டு முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பேரூந்தின் சாரதியினையும் கைது செய்தனர்

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டமையுடன் பேரூந்தினை பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் எடுத்துச்சென்றனர். 

இவ் விபத்தில் பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடயை சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்தவராவர்.
புதியது பழையவை