யூரியூப்பர் ஒருவர் ஊடாக கிளிநொச்சியில் வறுமையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு உதவுவதாக கூறி ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரால் தாயும் மகளும் கர்ப்பமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
38 வயதான குடும்பப் பெண் ஒருவரும் அவளது 16 வயதான மகளும் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் உதவி எனும் பெயரில் தாயையும் மகளையும் புலம்பெயர் தமிழர் சீரழித்த சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உதவி எனும் பெயரில் சீரழிப்பு
பெண்ணின் கணவன் வேலை தேடி ஆசிய நாடு ஒன்றுக்கு நிலையில் இரு பெண் பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண், படையினரின் விவசாயப் பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார்.
மூத்த பெண் பிள்ளை 15 வயதுடன் பாடசாலைக்கு செல்வதை கை விட்டுள்ளார். 12 வயதான இரண்டாவது பெண் பிள்ளை தற்போதும் பாடசாலைக்கு சென்று வருகின்றாள்.
இந்நிலையில் கடந்த வருட முற்பகுதியில் கணவன் வெளிநாடு சென்ற பின்னர் சுயதொழில் தொடங்கப் போவதாக கூறி யூரியூப்பர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு வெளிநாட்டு உதவி பெற்றுள்ளார்.
இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஜேர்மன் நாட்டிலிருந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பெண்ணின் வீட்டுக்கு பல தடவைகள் யூரியூப்பருடன் வந்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் பெண்ணும் அவளது இரண்டு மகள்களும் சில நாட்கள் வீட்டில் தங்காது ஜேர்மன் நபருடன் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் திடீரென மகள் சுகவீனமடைந்த நிலையில் சம்பவம் அம்பலமாகியதால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்ணும் இரு பெண் பிள்ளைகளும் வவுனியாவுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த யூரியூப்பர் ஒருவரே இவ்வாறான கேவலமான செயற்பாடுகளை புலம்பெயர் தமிழர்களை குளிர்விப்பதற்காக செய்து வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை குறித்த யூரியூப்பர் ஏராளமான கஸ்டப்பட்ட விசேட தேவையுடையவர்கள் இருக்கும் போதும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு தனிமையில் வாழும் பெண்களை குறி வைத்து உதவி செய்வதாக கூறி இவ்வாறு அசிங்கமான செயற்பாடுகளை செய்துவருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.