அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!




பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலநடுக்கமானது இன்று(27-03-2024) காலை 6.58 மணியளவில்  ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுனாமி எச்சரிக்கை

அத்தோடு, இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படக்கூடும் என்ற அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.


இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது சுவாவிற்கு தென்மேற்கே 591 கி.மீ தொலைவில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
புதியது பழையவை