பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் சித்திரவதை செய்யப்படும் தாயக இளைஞர்கள்



வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் இளைஞர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இன்னும் இந்த நாட்டிலே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று இளைஞர்களுக்கு அநீதி நடக்கிறது. உல்லாசமாக 450 CC க்கு மேல் வேகமாக போக முடியாது என்பது உங்களது கண்ணுக்கு அநீதியாக தெரிகிறது.

நாட்டை வங்குரோத்து நிலை
ஆனால் எங்களது இளைஞர்கள் எத்தனையோ பேர் காணாமல் ஆக்கப்பட்டது ஒரு அநிதியாக உங்களுக்கு தெரியவில்லை.

நாட்டினுடைய முன்னாள் நிதி அமைச்சர், நாட்டிற்கு வருகை தந்த பொழுது நீங்களும் அந்த விமான நிலையத்தில் உங்களுடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டீர்கள்.

அவரை வரவேற்க சென்று இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் இணைந்து தான் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கினீர்கள்.


இன்று இந்த அரசாங்கத்தின் உடைய ஒரு பிரச்சனையாக இளைஞர்களுக்கு நடக்கும் ஒரு அநீதியாக இந்த ஒத்திவைக்கும் பிரேரணையை நீங்கள் முன்மொழிவது வேடிக்கையான ஒரு விடயம்'' என்றார்.
புதியது பழையவை