சாந்தனின் உடலுக்கு மதகுருமார்கள் அஞ்சலி



சாந்தனின் உடலுக்கு அவரது இல்லத்தில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது..

தாய் நாட்டிற்கு சென்று அம்மாவின் கையில் ஒருவேளை உணவினை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் இருந்த சாந்தன் இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவினை பெற்று கடவுச்சீட்டை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.


இந்திய - இலங்கை அரசுகளது கூட்டு சதியால் காவு கொள்ளப்பட்ட சாந்தனின் புகழுடல் அவன் நேசித்த மண்ணிற்கு வந்திருக்கின்றது. 



இறுதி அஞ்சலி

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் பெருமளவிலான மக்கள் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.




பாதை முழுதும் மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்த சொந்த இடமான தீருவிலில் அவரது வீட்டில் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், சாந்தனின் உடல் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், மதகுருமார்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதியது பழையவை