பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படிஇ 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள்இ ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர் 08 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும்இ கல்கிசை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எஸ்எஸ்பி இ.எம்.எம்.எஸ். தெகிதெனிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்எஸ்பி கே.ஜி.ஏ.கே. பியசேகர களுத்துறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதியது பழையவை