மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ரேடியோ தெரபி சாதனம் பழுது!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவில், ரேடியோ தெரபி சாதனம் பழுதடைந்ததால், நோயளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ரேடியோ தெரபி சாதனத்தை திருத்துவதற்குரிய தொழில்நுட்பவியாலளார் ஒருவர் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்றும்
நோயாளர்கள் சுட்டிக்காட்டினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், புற்றுநோய்ப் பிரிவின் ரேடியோ தெரபி சாதனம் பழுதடைந்தமை தொடர்பில், நோயாளிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு இணங்க
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது.
குறித்த பிரிவில் காணப்படும் ரேடியோ தெரபி சாதனமானது சுகாதார அமைச்சினால், தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,
சாதனத்தை பராமரிக்கும் தொழில் நுட்ப வியலாளருக்கான பற்றாக்குறை நீடிக்கும் நிலையில், ஒரு உத்தியோகத்தரே யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு புற்றுநோய் பிரிவின் கதிர்வீச்சு இயந்திர தொழில் நுட்ப விடயங்களை கண்காணித்து வருகின்றார்.

இந்நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பில் பழுதடைந்துள்ளதாக கூறப்படும் ரேடியோ தெரபி இயந்திரத்தை பழுது பார்க்க தொழில் நுட்ப உத்தியோகத்தர் இல்லாத காரணத்தினால், நோயாளிகள் அசௌகரியத்துக்குள்ளதாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர். இந்நிலையில் எதிர்காலத்தில் மட்டக்களப்புக்கு என்று தனியே ஒரு தொழில்நுட்பவியலாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.

வினைத்திறனான சேவைகளை வழங்குவதே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதியது பழையவை