யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு!வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கத்தையும் உடன்நிறுத்துமாறும், வெடுக்குநாறிமலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மார்ச் 19ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை