பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய அரசியல்வாதி!
திவுலபிட்டிய உள்ளூராட்சி சபையின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி ஐந்து நாட்களாக தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், பல்லேவெல பொலிஸார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவன் கடந்த 11ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாக அவரது தாயார் கூறியுள்ளார்.


பொலிஸார் விசாரணை
மீரிகம பதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மீரிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கியமை தொடர்பில் குறித்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பல்லேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை