நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சிபொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க முற்பட்டதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

தனது சிறப்புரிமையை மீறியமைக்காக நாடாளுமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை தன்னை அவர் அச்சுறுத்தியதோடு நாடாளுமன்றத்தில் பிரதமரின் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு உத்தரவாதம் இந்த நாட்டில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதியது பழையவை