கொழும்பு ஆமர்வீதியில் பாரிய தீ விபத்து!
கொழும்பு ஆமர் வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆமர் வீதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


அத்துடன், குறித்த தீ விபத்தின் காரணமாக சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ்குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதியது பழையவை