சிவராத்திரியில் கைதானவர்கள் உண்ணாவிரத போராட்டம்!
வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று செவ்வாய்க்கிழமை (12-03-2024) உத்தரவு பிறப்பித்துள்ளது.


விடுதலைசெய்யகோரி உண்ணாவிரத போராட்டம்
இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை (12) மாலை அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தங்களை விடுதலைசெய்யகோரி அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதேவேளை நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படும் போதே அவர்கள் உணவினை எடுத்திருக்கவில்லை என்பதுடன் இந்நிலையில் புதன்கிழமையும் உணவினை உட்கொள்வதற்கு மறுத்துள்ளனர்.

இந்நிலையில் கைதான எட்டுபேரில் ஆலயபூசாரியார் த.மதிமுகராசா, து.தமிழ்ச்செல்வன், தி.கிந்துயன்,சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
புதியது பழையவை