மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-03-2024) உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டையில் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வழக்கம் போல் மீன் பிடி தொழிலுக்கு சென்றவர் குளத்தில் மீன் பிடிப்பதற்காக கட்டு வலையினை கட்டிவிட்டு அங்கிருந்த கட்டிலில் உறங்கி கொண்டிருந்த வேளை காட்டு யானை அவரை தாக்கியுள்ளது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளதுடன் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை