மாட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பழுகாமம் பிரதேச வைத்திய சாலைக்கு குறைபாடாக உள்ள மருந்துகளை இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதி உதவியில் இன்று (13-03-2024) வழங்கிவைக்கப்பட்டது.
பொதுமக்களின் நலன் கருதி முக்கியமான சில மருந்துப்பொருக்களை இலங்கைக்கான அகிலன் பவுன்டேசன் இணைப்பாளரும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் ஆகிய வி.ஆர்.மகேந்திரன் JP.MAF, பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் P.சோதிராஜா அவர்களிடம் மருந்துப்பொருட்களை வழங்கி வைத்தார்.
மருந்துப்பொருக்கள் வழங்கும் நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டதுன் வைத்திய சாலைக்கு மேலும் உதவிகள் தேவைப்படுவதாகவும் கேட்டுக்கொண்டனர்.