சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.
‘வாழ்வோம், வீட்டையும் சமூகத்தையும் செழிப்பாக வைத்திருக்கும் பெண்களை வாழ்த்துவோம்’ எனும் தொனிப்பொருளில்
நிகழ்வு நடைபெறுகின்றது.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது நாள் நடைபெறுகின்ற உற்பத்தி பொருட்களின் கண்காட்சி, விற்பனை நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பெண் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள், விசேட தேவையுடைய பெண்கள், கிராம அபிவிருத்தி அமைப்புகளின் பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.