கெப் ரக வாகனமொன்றும் காரொன்றும் மோதி விபத்து!அம்பாறை - மூவாங்கலை வீதியில் கெப் ரக வாகனமொன்றும் காரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப் ரக வாகனமொன்று ஹிகுரானையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த போது வாகனத்தின் சில்லொன்று கழன்று கெப் ரக வாகனம் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் கெப் ரக வாகனத்தில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.கெப் ரக வாகனத்தின் சாரதியினால் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதியது பழையவை