வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோவிலடி இருளில் மூழ்கியிருக்கறது - மக்களுக்கு ஆபத்து அவிசரம் உதவுங்கள்


இருளில் மூழ்கியிருக்கறது வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோவிலடி. சிவராத்திரியில் எல்லோருக்கும் ஒளிபிறக்கட்டும் எனக்கூறிய ஜனாதிபதியின் படைகளும், பொலிஸாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் அந்தக் காடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். அன்னதான சமையல், ஏனைய படையல் பொருட்கள் அனைத்தையும் அரச படைகள் காலால் உதைத்து சீரழித்துவிட்டனர்.

எஞ்சியிருந்த தண்ணீர் கலனையும் சற்றுமுன் பொலிஸார் கவிழ்த்து ஊற்றிவிட்டனர். வெளியிலிருந்து அங்கே செல்பவர்களைத் தடுத்திவைத்திருக்கின்றனர்.

அங்கிருக்கும் அனேகருடைய தொலைபேசிகள் ஓவ் ஆகிவருகின்றன. மின்இயந்திர் பயன்படுத்த விடவில்லை. பெற்றோல்மக்ஸை தயார்படுத்த அதனையும் பொலிஸார் பறித்துச் சென்றுவிட்டனர். 


இப்போது கோயில் தீப வெளிச்சத்தில்தான் அங்குள்ளவர்கள் இருக்கின்றனர். குழந்தைகள் குடிக்க குடிநீர் கூடத் தராத ஏவல் பேய்கள் இருளுக்குள் எதை வேண்டுமானாலும் செய்யும். அங்கு ஒரு மானுட அவலம் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களும், வேலன்சுவாமிகளும் மட்டும்தான் அங்கிருந்து குரல்தரவல்லவர்கள். அங்கு கூடியிருக்கும் சிவ பக்தர்களை ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது.

அரசியல்வாதிகளே..தூதரகங்களே..மனிதவுரிமையாளர்களே..ஊடகங்களே..சிவில் சமூக அமைப்புக்களே..
அவர்களுக்காக விரைந்து குரல்கொடுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இருளுக்குள், ஆயுத்தாரிகளுக்கு மத்தியில் தனித்துவிடப்பட்டிருக்கும் அவர்களை ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது.
புதியது பழையவை