சிவராத்திரி தின வழிபாட்டுக்காக வெடுக்குநாறிமலைக்கு செல்ல நீண்ட இழுபறியின் பின் அனுமதி!
சிவராத்திரி தின வழிபாட்டுக்காக வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம் செல்ல நீண்ட இழுபறியின் பின் அனுமதி கிடைத்துள்ளது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் 300க்கும் மேற்பட்டோர் வெடுக்குநாறிமலை மலை ஏறுகின்றனர்.


தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், செல்வராசா கஜேந்திரன், வேலன் சுவாமிகள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வெடுக்குநாறிமலை சிவன் ஆலய சிவராத்திரி விழாவுக்கு வருகைதந்த நிலையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.


நீதிமன்ற அனுமதியுடன் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வர கோயிலில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு சென்றவர்களை- அனுமதியின்றி அரச வனத்துக்குள் நுழைந்தமை, காவல்துறையினரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் நெடுங்கேணி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

புதியது பழையவை