மட்டக்களப்பில் உணவுப் பாதுகாப்பு மக்களின் அடிப்படைமட்டக்களப்பு மாவட்டம் பூராக உள்ள உணவு பரிமாறப்படும் இடங்களில் எல்லாம் உணவு வகைகள் பாதுகாப்பாக கையாளப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது எமது கடமையாகும். அந்த வித்த்தில இந்த ஸ்டிக்கர் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவுள்ள அனைத்து கோட்டல்களிலும் விரைவில் ஒட்டப்பட இருக்கிறது. 

உண்மையான, நேர்மையான முறைப்பாடுகளையோ அல்லது பாராட்டுதல்களையோ WhatsApp மூலம் புகைப்படங்களுடன் செய்தியாக மாத்திரம் அறிவியுங்கள். நாங்கள் தவறுகளை திருத்தி முறைப்படுத்த தயாராகி நிற்கின்றோம்.

பெருகிவரும் தொற்றா நோய்களுக்கான ( முக்கியமாக புற்றுநோய், சிறுநீரகநோய், இருதயநோய், நீரிழிவு ) முக்கிய காரணமாக கெமிக்கல் அடங்கிய உணவுப்பொருட்களே காரணமாக அமைகின்றது. அத்துடன் தொற்றுநோய்களான வயிற்றுப்போக்கு , தைபோயிட்டு போன்றவற்றிற்கும் காரணமாய் அமைகின்றது.

ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி எல்லோரையும் உற்சாகப்படுத்துவோம். திட்டமிட்டு தவறு செய்பவர்கள் இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.

குறிப்பு:-

1. QR code ஐ Scan பண்ணி நேரடியாக வாட்சப் செல்லுங்கள்
2. விலைகளை பற்றியோ சுவைகளை பற்றியோ எம்மால் நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது.
மகிழ்ச்சி
‘எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்’

Dr.Sukunan Gunasingam
RDHS, Batticaloa
புதியது பழையவை