குரோதி வருடப்பிறப்பு -2024 - சித்திரை வருடப்பிறப்பு நல் வாழ்த்துக்கள்





இன்று(13-04-2024) சனிக்கிழமை இரவு 08 மணி 15 நிமிடத்தில் குரோதி வருடம் பிறக்கின்றது.

மருத்து நீர் வைக்கும் நேரம்:-

(13-04-2024 )சனிக்கிழமை மாலை 04.15 முதல் நள்ளிரவு 12.15 வரை தேய்க்கலாம்.

தலை - ஆலிலை, கால் - புங்கை இலை, திசை வடக்கு.

கை விஷேடம் வழங்கும் நேரம்:-

(14-04-2024)ஆம் திகதி காலை 07.57 முதல் காலை 09.56 வரையில் வழங்கலாம். அல்லது (14-04-2024) ஆம் திகதி காலை 09.59 முதல் நண்பகல் 12.01 வரையில் மாலை 06.17மணி முதல் இரவு08.17மணி வரை வழங்கலாம்.

அணியும் ஆபரணங்கள்:-


நீலக்கல் பதித்த அல்லது வைரக்கல் பதித்த ஆபரணங்களை அணியலாம்.

அணியும் ஆடைகள்

கபிலம் அல்லது வெள்ளை நிற ஆடையை அணியலாம்.

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்:-

மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் (01ஆம், 02ஆம் பாதங்கள்), சித்திரை, விசாகம் (04ஆம் பாதம்), அனுஷம், கேட்டை, அவிட்டம்.

வியாபாரம், புதிய கணக்குகள் ஆரம்பிக்கும் நேரம்:-

(15-04-2024 )திங்கட்கிழமை காலை 09.08 தொடக்கம் காலை 09.51 வரை அல்லது அதே நாள் காலை 09.55 தொடக்கம் காலை 10.31 வரையில் ஆரம்பிக்கலாம்.

மலரும் சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய Battinatham news இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

புதியது பழையவை