6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் பரிந்துரைக்கும் அதிகாரத்தை கட்சியின் ஒழுக்காற்று சபைக்கு வழங்க கட்சியின் அரசியல் சபை தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆசன அமைப்பாளர் பதவிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மாவட்ட மட்டத்தில் பெண் அமைப்பாளர்களை நியமிக்கவும் தீர்மானித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழு கூட்டம் நேற்று (09-04-2024) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த சந்திப்பில் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை