அனைத்து தாதியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்
அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கையானது இன்றும்(01-04-2024) நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளது.


சீருடை கொடுப்பனவு


தாதியர்களின் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹடவல தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை