தமிழர் தரப்பு பொதுவேட்பாளராக மனோ கணேசன்!அரச தலைவர் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பரப்பில் பொதுவான ஒரு தமிழ் வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.

அந்த வகையில் பொதுவேட்பாளர் தெரிவில் தனது பெயரும் முன்மொழியப்பட்டு உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகள்
எனினும் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை ஒருவரை அடையாளம் காண்பதற்கு முன்னர் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் என்ன என்ற விடயம் தீர்மானிக்கப்பட வேண்டியது, முக்கியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமிழர் தரப்பில் பொதுவேட்பாளராக மனோகணேசனை முன்னிறுத்த வேண்டுமென மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை