மட்டக்களப்பில் சற்று முன் பாரிய விபத்து!மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது இன்று(14-04-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முன்று வாகனங்கள் பாரிய சேதமடைந்துள்ளதுடன், சிறுகுழந்தை உட்பட பலர் பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பிலான மேலதிக விசாரனையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை