இலங்கை விமான படை அதிகாரி சுட்டுக்கொலை




பாதுக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் சோதனைச் சாவடிக்கு அருகில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம்
பின்னர் பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 26 வயதுடைய விமானப்படை வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை