கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞன்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் ஆவணங்கள் பரிசோதனை செய்த போது போலியான இலங்கை கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டை பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை