ஜப்பானில் மூன்றாவது முறையாக தொடரும் நிலநடுக்கம்




ஜப்பானின் ஹோன்ஷு( Honshu ) நகரில் இன்று (06-04-2024) மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதுடன் அலைகள் மூன்று மீற்றர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது.


சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அத்தோடு தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த மூன்றாம் திகதி 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.


இந்நிலநடுக்கம் நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்டதோடு 35 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

மேலும் தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில் 1000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை