இலங்கையர்களுடன் இஸ்ரேலுக்கு பறந்த விமானம் டுபாய்க்கு திரும்பியது!இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிலை காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டுபாயிலிருந்து இலங்கையர்கள் குழுவுடன் டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பில் அவர் இதற்கு முன்னர் தெளிவுப்படுத்தியிருந்தார்.

குறித்த விமானத்தை மீண்டும் டுபாய் நோக்கி திரும்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விமானத்தில் இஸ்ரேல் நோக்கி பயணித்த இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதியது பழையவை