தகாத முறைக்கு உள்ளான பெண் - காயங்களை பார்க்க ஆடைகளை கழற்ற கோரிய நீதிபதி
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இனந்தெரியாத நபரால் கடந்த 19 ஆம் திகதி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு ஹின்டாவுன் நகர நீதிமன்றில் நடந்து வந்தது. கடந்த 30-ம் திகதி ஹின்டாவுன் நகர நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.


ஆடைகளை கழற்றும்படி
அப்போது நீதிபதி காயங்களை காட்டுவதற்காக ஆடைகளை கழற்றும்படி அந்த பெண்ணிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறினார்.


பின்னர் இது தொடர்பாக நீதிபதி மீது அந்த பெண் காவல்துறையில் முறைப்பாடு அளித்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஹின்டாவுன் நகர காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
புதியது பழையவை