மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் விபத்து!
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தினால் சாரதியொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்தானது, இன்று (02-04-2024) இடம்பெற்றுள்ளது.

சுற்றுலாப்பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் கெப் ரக வாகனமொன்று வேககட்டுப்பாட்டை இழந்து வீதியருயிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டத்தில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது இவ்வாகனத்தின் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதாகவும் அவர் காயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அத்தோடு, சாரதியின் நித்திரை கண்கலக்கமே இச் சம்பவத்துக்கு காரணமாகலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

விபத்தினால் அருகிலிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 4 பாரிய மின்கம்பங்கள் உடைந்து முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், உரிய கெப் ரக வாகனமம் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.


இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை